ETV Bharat / city

ரூ.883 கோடியில் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி பணிகள்!

வேலூர்: ரூ.883 கோடியில் மதிப்பில் குடிநீர், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்டவைகள் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

commisioner sivasubramaniyan
author img

By

Published : Jun 26, 2019, 7:45 AM IST

வேலூர் மாவட்டத்தில் நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து வேலூர் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்ததாவது,

"வேலூரில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 34 பணிகள் ரூ.883 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் அனைவருக்கும் தினசரி 135 லிட்டர் தண்ணீர், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்துவதன் மூலம் மாநகரத்தில் சேரும் குப்பைகளின் அளவு பெருமளவு குறைந்துள்ளது, 46 கோடி செலவில் வேலூர் புதிய பேருந்து நிலையம் சீரமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது. இதற்கான தொழில்நுட்ப ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

வேலூர் கோட்டையில் உள்ள அகழியை தூர்வாரி சீரமைக்கும் பணி நடக்கிறது. மேலும் பாலாற்றில் குப்பைகளை கொட்டக்கூடாது என மாநகராட்சி ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம் அதையும் மீறி குப்பைகள் கொட்டப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது 60 வார்டுகள் மாநகராட்சியில் உள்ளன இதில் 20 வார்டுகளில் மட்டும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஐந்து விழுக்காடு பணிகள் நடைபெற்றுள்ளது. 2021ஆம் ஆண்டிற்குள் பணிகள் முழுமையடையும். இதுவரை 212 கோடி நிதி பெறப்பட்டுள்ளது மீதமுள்ள நிதி படிப்படியாக பெறப்பட்டு அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரூ.883 கோடியில் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தீவிரம்

Intro:வேலூர் மாநகரில் ரூ.883 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் பேட்டிBody:வேலூர் மாவட்டத்தில் நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து வேலூர் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில் ,"வேலூரில் மத்திய அரசின் மாநகராட்சி சீர்மிகு நகரமாக்கும் திட்டத்தின் கீழ் 34 பணிகள் ரூ 883 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது அதில் அனைவருக்கும் தினசரி 135 லிட்டர் தண்ணீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்துவதன் மூலம் மாநகரத்தில் சேரும் குப்பைகளின் அளவு பெருமளவு குறைந்துள்ளது 46 கோடி மதிப்பில் வேலூர் புதிய பேருந்து நிலையம் சீரமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது இதற்கான தொழில்நுட்ப ஆய்வுகள் நடைபெற்று வருகிறது வேலூர் கோட்டையில் உள்ள அகழியை தூர்வாரி சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது பாலாற்றில் குப்பைகளை கொட்ட கூடாது என மாநகராட்சி ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளோம் அதையும் மீறி குப்பைகள் கொட்டப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் தற்போது 60 வார்டுகள் மாநகராட்சியில் உள்ளன இதில் 20 வார்டுகளில் மட்டும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது 5 சதவீதம் பணிகள் நடைபெற்று உள்ளது 2021 ஆம் ஆண்டிற்குள் பணிகள் முழுமையடையும் மாநகராட்சி நகரமாகும் திட்டத்தின் கீழ் இதுவரை 212 கோடி நிதி பெறப்பட்டுள்ளது மீதமுள்ள நிதி படிப்படியாக பெறப்பட்டு அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.