தமிழ்நாடு அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் திருமண நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி வேலூரில் நடைபெற்றது. சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மாவட்ட, சமூக நல அலுவலர் முருகேஸ்வரி, மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு வரை படித்த 992 பெண்களுக்கு திருமண நிதி உதவியாக தலா 25 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 8 கிராம் தங்க நாணயங்களும் வழங்கப்பட்டன. அதுபோல் பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ படித்த 2,008 பெண்களுக்கு திருமண நிதியுதவியாக தலா ரூ.50 ஆயிரம் பணம், திருமாங்கல்யம் செய்வதற்காக 8 கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.
மொத்தம் 3,000 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 74 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான தங்கத்துடன் 11 கோடியே 52 லட்சம் ரூபாய் நிதியுதவி என மொத்தம் ரூ. 21 கோடியே 26 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க: 245 பேருக்கு டெங்கு பாதிப்பு! வேலூர் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல்!