திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் மாணவர்கள், காவல் துறையினர் இடையே நட்பை ஏற்படுத்தும் விதமாக மாணவர்களுக்கு காவல் துறை பணிகள் குறித்தும், அதில் மாணவர்கள் வழங்க வேண்டிய ஒத்துழைப்பு குறித்தும் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் பங்கேற்க வாணியம்பாடி அரசு தொழிற்பயிற்சி மையத்தின் 45 மாணவர்கள், வாணியம்பாடி நகர காவல் நிலையம் வந்தனர். காவல் நிலையம் வந்த மாணவர்களுக்கு காவல் துறையினர் ரோஜா பூக்களை கொடுத்து வரவேற்று அவர்களுக்கு தேநீரும், ரொட்டித் துண்டுகளையும் வழங்கினர்.
உள்ளாட்சித் தேர்தல்: உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கும் முடிவுகள்!
பின்னர் நகர காவல் ஆய்வாளர் தலைமையிலான நடைபெற்ற காவல் துறை மாணவர் கருத்தரங்கில் மாணவர்களுக்கு காவல் துறையின் பணிகள் குறித்தும் மாணவர்கள் காவல் துறையினருடன் எப்படி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்த அறிவுரைகளை காவல் துறையினர் வழங்கினர்.
இதில் காவல் துறையினருடன் சகஜகமாக கலந்துரையாடிய மாணவர்கள், இத்தனை நாள் காவல் துறை மீதான தங்களுடைய பார்வை முற்றிலும் மாறியிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும் தங்களை போலவே அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையேயும் இதேபோல தொடர் கருத்தரங்குகளை காவல் துறை நடத்த முன் வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.