வேலூர்: உருமாறிய கரோனாவின் புதிய வகை வைரசான ஒமைக்ரான் இந்தியாவில் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை எதிர்கொள்ள இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக அடுக்கம் பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 50 படுக்கை வசதி, தீவிர சிகிச்சைக்கு நான்கு படுக்கை வசதி மற்றும் கரோனா சிகிச்சைக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியும் பட்சத்தில் அந்த நபரைத் தனிமைப்படுத்தவும் சிகிச்சை அளிக்கவும், அதற்கென தனியாக மருத்துவர்களும், செவிலியர்களும் அதற்கு மட்டும் பணிபுரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும் தனிமைப்படுத்தும் வசதி, தீவிர சிகிச்சை வசதி, ஆக்சிசன் வசதி, வென்டிலேட்டர் வசதி உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அதிமுகவில் இரண்டாவது நாளாக அடி உதை