ETV Bharat / city

ஜெயலலிதா பிறந்த நாள் விழா - மாநிலம் முழுதும்  அதிமுக சார்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்! - மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா

மாநிலத்தின் பல்வேறுப் பகுதிகளில் கொண்டாடப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில், அதிமுக கட்சி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

jayalalitha former CM of TN - BDay celebration across Tamil Nadu

author img

By

Published : Feb 25, 2020, 9:10 AM IST

தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் நேற்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக தஞ்சாவூர், திருவாரூர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், தருமபுரி, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், அதிமுக கட்சி நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என அவரது உருவப்படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் இந்த விழாவில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், இனிப்புகள், அன்னதானம் உள்ளிட்டவைகளை வழங்கினர். மேலும் அப்பகுதிகளிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம், இலவச மருத்துவ முகாம், ரத்த தான முகாம் உள்ளிட்டவைகளும் நடைபெற்றன.

மாநிலத்தின் பல்வேறுப் பகுதிகளில் அதிமுக சார்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்!

மாநிலத்தின் பல்வேறுப் பகுதிகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் ரமணா, சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், அதிமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் எனப் பலர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

இதையும் படிங்க: ஈரோட்டில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா - எம்எல்ஏக்கள் மரியாதை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.