ETV Bharat / city

'நீட் தேர்வு ரத்து தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பினால் பார்த்துக்கொள்ளலாம்' - அமைச்சர் துரைமுருகன் - திமுக

வேலூர் மாநகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை அமைச்சர் துரைமுருகன் அறிமுகம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்
author img

By

Published : Feb 11, 2022, 6:34 AM IST

வேலூர்: மாநகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று (பிப். 10) நடைபெற்றது. கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், 'வேலூர் மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் இரண்டு பேர் ஏற்கெனவே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டனர். இதைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன். வேலூர் எப்போதுமே திமுக கோட்டையாக விளங்குகிறது. அவ்வளவு நம்பிக்கை நம் மீது மக்கள் வைத்து உள்ளனர்.

பெரியாருக்கு பெண் கொடுத்த வேலூர்

திராவிட இயக்க வரலாற்றில் வேலூருக்கு அதிகப்பெருமை உள்ளது. திராவிட இயக்கக் கொள்கைகளை முதன்முதலில் அச்சில் ஏற்றிய ஊர் வேலூர். திராவிட பதிப்பகம் என்று வேலூரில் அப்போது தொடங்கப்பட்டது. பெரியார், அண்ணா, நாவலர், கருணாநிதி எழுதிய கருத்துகளை அந்த அச்சகத்தில் பதிவேற்றினர்.
பெரியாருக்குப் பெண் கொடுத்தது வேலூர். வேலூரில் காந்தி சிலை அமைய உறுதுணையாக இருந்தவர்கள் திராவிட இயக்கத்தினர்.

அமைச்சர் துரைமுருகன் தேர்தல் பிரச்சாரம்
வீட்டில் சமையல் கூடத்தில் முடங்கிக்கிடந்தவர்கள், குடும்பத்தினருடன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த பெண்கள் இப்போது நாட்டுப்பணியாற்ற இங்கே அமர்ந்திருக்கிறார்கள்.
சீர்மிகு நகரத்திட்டத்திற்காக ரூபாய் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அது தற்போது எங்கே போனது. தெருக்கள் எல்லாம் தோண்டினார்கள். ஆனால், மூடாமல் போட்டுவிட்டார்கள். பணிகள் முடிக்கும் முன்பே அனைத்துப் பணிகளுக்கும் தொகையைக் கொடுத்துவிட்டார்கள்.
சேலத்திற்கு மேட்டூரிலிருந்து நீர் கொண்டுவரும் திட்டத்தில் இதுவரை ரூ.560 கோடி நிதி ஒதுக்கி விட்டார்கள். ஆனால், ஒரு குளத்திற்குக் கூட நீர் செல்லவில்லை. மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 9 மாதங்களாகிறது. 8 மாதங்கள் கரோனாவை கட்டுப்படுத்துவதிலும் மக்கள் உயிரைக் காப்பதிலும் சென்றுவிட்டது. ஆட்சி நிர்வாகம் முழுமையாக நடத்த முடியவில்லை.

நீட் தீர்மானம்

"நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், 234 உறுப்பினர்களை துச்சமாக நினைத்து முகத்தில் அடிப்பதுபோல் நினைத்து திருப்பி அனுப்பிவிட்டார். ஆனால், தற்போது மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி உள்ளோம்.

இந்த முறை அவர் நீட் தேர்வு ரத்து தீர்மானத்தை திருப்பி அனுப்ப முடியாது. அதுதான் சட்டம். ஒன்று அவராகவே வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி வைத்துக்கொண்டால் அவரை திட்டிக்கொண்டே தான் இருப்போம். ஒருவேளை அவர் தீர்மானத்தை அனுப்பி வைத்தால் அவரைத் திட்டமாட்டோம். அதற்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்றார்.

நல்ல வேட்பாளர்கள்

மேலும் அவர், 'மக்களுக்கு அனைத்து வளர்ச்சிப் பணிகள் அடிப்படை வசதிகளைக் கொண்டு செல்வது உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் கையில்தான் உள்ளது. ஒரு அகப்பை நன்றாக இருந்தால்தான், அதில் நான்கு துண்டு அதிகமாக விழும். அகப்பை தேய்ந்திருந்தால் இரண்டு துண்டு தான் விழும். நாங்கள் நல்ல (வேட்பாளர்கள்) அகப்பைகளாகத் தேர்வு செய்து நிறுத்தி உள்ளோம்.

மேலும், அவர்களை வெற்றி பெறச்செய்யுங்கள். கட்சி எனக்கு என்ன செய்தது எனக்கேட்பவன் கட்சிக்கு ஏற்பட்ட தொற்று நோய். கட்சிக்காக நான் என்ன செய்தேன் என்பவன் தான் திமுகவின் ரத்த நாளம் எனக் கலைஞர் கூறுவார். அவரது வழியில் செயல்பட்டு வேலூர் மாநகராட்சியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: Hijab Row: இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் முயற்சி நடைபெறுகிறது - இமாம் கவுன்சில் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.