வேலூர்: குடியாத்தம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இங்கு புற நோயாளிகளாக தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். உள் நோயாளிகளாக 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே மருத்துவமனை அவசர சிகிச்சை புற நோயாளிகள் பிரிவில் ரசீது கொடுக்கும் தற்காலிக ஊழியர் ஒருவர், நோயாளியிடம் லஞ்சம் கேட்டுப் பெறும் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இதனையடுத்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் வருவாய் கோட்டாட்சியர் தனஞ்செழியன், அங்குள்ள ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: ஐஐடி-களில் சாதிய பாகுபாடு? - அதிர்ச்சி தரும் ஆர்டிஐ தகவல்கள்...