ETV Bharat / city

டெல்லியில் தற்கொலை போராட்டம்! - அய்யாக்கண்ணு அறிவிப்பு! - டெல்லியில் தற்கொலைப் போராட்டம்

திருச்சி: வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி டெல்லியில் தினம் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்தப்போவதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

protest
protest
author img

By

Published : Dec 17, 2020, 1:05 PM IST

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் அது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, ” வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளை ஏஜென்ட்டுகள் என சிலர் தவறாக சித்தரிக்கப் பார்க்கின்றனர்.

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் 100 நாட்கள் போராட்டம் நடத்தினோம். உடனே இரண்டு மடங்கு லாபத்துடன் விலை நிர்ணயம் செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் தற்போது வரை அது வழங்கப்படவில்லை. இதை நாங்கள் கேட்டுவிடக்கூடாது என்பதற்காக, எங்களை ஏமாற்றுவதற்காக புதிதாக வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. புதிய வேளாண் சட்டம் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் தற்கொலை போராட்டம்! - அய்யாக்கண்ணு அறிவிப்பு!

எனவே, இவற்றையெல்லாம் தடுக்க தமிழகத்திலிருந்து முதல் கட்டமாக தற்போது 30 விவசாயிகள் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளோம். அங்கு புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி தினமும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து உள்ளோம். தேவைப்பட்டால் 100 விவசாயிகள் வரை டெல்லி செல்வோம். டெல்லி செல்வதற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோம். அதன் தீர்ப்பு வரும் வரை சென்னை மற்றும் திருச்சியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது “ என்றார்.

இதையும் படிங்க: ஆடைகளை மாற்றலாம், கொள்கைகளை மாற்ற முடியாது - மம்தா பானர்ஜி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.