திருச்சி: மணப்பாறை பகுதிகளில் கடந்த சில நாள்களாக வீடுகள் மற்றும் கடைவீதி பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்கள் திருட்டு போவதாக வந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்ததனர்.
இந்நிலையில் மணப்பாறை காவல் துணை கண்கானிப்பாளர் உத்தரவின்பேரில், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் குற்றப்பிரிவு காவலர்கள் நேற்று முன்தினம் திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே இருக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை நிறுத்தி மேற்கொண்ட சோதனையின்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.
இது, காவலர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து இளைஞர்களை காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில் அந்த இளைஞர்கள் புத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும், மற்றொருவர் தென்னூரைச் சேர்ந்த சதாம் உசேன் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மணிகண்டன், சதாம் உசேனிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில், பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடி கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்ததும், திருச்சி சிட்டியில் உள்ள காவல்நிலையங்கள் அனைத்திலும் வாகனத் திருட்டு சம்பந்தமாக இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து இளைஞர்கள் மீது மணப்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க : தொடரும் இருசக்கர வாகனத் திருட்டு; திணறும் காவல் துறை