ETV Bharat / city

திரவ ஆக்சிஜன் சேமிப்பு கலன் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் - ஜோதிமணி எம்.பி! - அப்துல்சமது

திருச்சி மாவட்டம் மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் திரவ ஆக்ஸிஜன் சேமிப்பு கலன் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என ஜோதிமணி எம்.பி., தெரிவித்துள்ளார்.

ஜோதிமணி , jothimani, அப்துல்சமது, abdul samad
திரவ ஆக்சிஜன் சேமிப்பு கலன் அமைக்கும் இடம் குறித்து எம்.பி,எம்.எல்.ஏ ஆய்வு.
author img

By

Published : Jun 11, 2021, 8:46 AM IST

திருச்சி: மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த மே மாதம் முதல் 100 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. படுக்கைகள் நிரம்பி வழிந்த நிலையில், தற்போது 76 தொற்றாளர்கள் மட்டுமே சிகிச்சையில் இருப்பதாகவும், சிகிச்சை பெறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜோதிமணி, அப்துல்சமது ஆய்வு

மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், சிகிச்சை குறித்தும் நேற்று (ஜூன் 10) கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் ப.அப்துல்சமது ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கோண்டனர்.

ஆக்ஸிஜன் தேவை இருக்கும் தொற்றாளர்களுக்கு அளிக்கப்படும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தற்போது மாவட்ட நிர்வாகம் மூலம்தான் மருத்துவமனை நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மணப்பாறை மருத்துவமனையில் ஏற்கனவே அமைக்கட்டுள்ள திரவ ஆக்ஸிஜன் கலனை மீண்டும் நிறுவ வேண்டும் என்றும், அதன்மூலம் ஒரு சிலிண்டரிலிருந்து பெறப்படும் 7 ஆயிரம் லிட்டர் ஆக்ஸிஜனை போன்று ஆயிரம் சிலிண்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜனை எளிதாக தங்குதடையின்றி பெற முடியும். இதன்மூலம் நோயாளிகளின் உயிர் இழப்பை தடுக்க முடியும்.

தன்னார்வ நிறுவனம் ஒப்புதல்

இந்த கோரிக்கை கடந்த முறை ஆய்வின்போது ஜோதிமணியிடம் முன் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மீண்டும் ஒரு டன் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்ஸிஜன் சேமிப்பு கலன் அமைப்பதற்கான இடத்தை ஜோதிமணி, அப்துல்சமது ஆகியோர் பார்வையிட்டனர்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, "மணப்பாறை மருத்துவமனையில் ஒரு டன் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்ஸிஜன் சேமிப்பு கலன் அமைப்பதற்காக மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் உதவிக்கேட்டுள்ளேன். அதில் ஒரு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, வெகுவிரைவில் அதற்கான பணிகள் தொடங்கும்" என்றும் கூறினார்.

இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலை உயர்வு: காங்கிரஸ் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.