ETV Bharat / city

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு திருச்சி கிழக்குத் தொகுதி! - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி

திமுக கூட்டணியில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சியின் சார்பில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

iuml meeting in trichy
iuml meeting in trichy
author img

By

Published : Nov 21, 2020, 2:48 PM IST

திருச்சிராப்பள்ளி: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் திருச்சி தெற்கு, வடக்கு மாவட்ட பொதுகுழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாச ஹாலில் நடந்தது.

இதில் மாவட்ட தலைவர்கள் நிஜாம், (தெற்கு ) அப்துல் வகாப் (வடக்கு) ஆகியோர் தலைமை வகித்தனர். தேசிய கவுன்சில் உறுப்பினர் மன்னான், வடக்கு மாவட்ட பொருளாளர் வியாகத் அலி, ஓய்வுபெற்ற உதவி ஆட்சியர் சாகுல் அமித், ஒய்வுபெற்ற காவல் உதவி - ஆணையர் அப்துல் அஜிஸ் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கீழே காணலாம்:

  • 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு திருச்சி கிழக்கு தொகுதியை கேட்டுப்பெற வேண்டும்.
  • திருச்சி காந்தி சந்தையை பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக மீண்டும் திறக்க வேண்டும்.
  • தேசிய குடியுரிமை திருத்த மசோதா சட்டத்தை திரும்பப் பெற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
  • திருச்சி சந்திப்பு மேம்பாலப் பணியைத் துரிதப்படுத்த மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • கரோனா காலத்தின்போது வாகன ஓட்டிகள், மத வழிபாடு செய்தவர்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியவர் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.