திருச்சி: மன்னார்புரத்தில் உள்ள எல்ஃபின் நிதி நிறுவனம், அறம் மக்கள் நலச் சங்கம் என்றும் பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்பவர்களுக்கு பன்மடங்கு பணம் திருப்பி தரப்படும் என்று கூறப்பட்டதால், நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்துள்ளனர்.
ஆனால் முதலீடு செய்தவர்களின் திட்டம், முதிர்வு காலம் அடைந்த நிலையிலும் பலருக்கு பணம் திருப்பி தரப்படாமல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் மீது பல்வேறு மோசடி புகார்களும் வந்தன. இதுகுறித்து வருமான வரித்துறை, பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் பணம் திருப்பி மீண்டு தர வேண்டி பாதிக்கப்பட்ட 150க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகளை சாலைகளில் கொட்டி திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து துணை ஆணையர் முத்தரசுவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: வங்கியில் போலி நகைகள் மோசடி: கேரளாவைச் சேர்ந்தவர் கைது