திருச்சி: தமிழ்த்திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர், நடிகர் சூர்யா. இவருடைய பிறந்தநாள் விழாவைக்கடந்த மாதம் 23ஆம் தேதி அவரது ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடினர்.
இந்நிலையில் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகேயுள்ள வ.இடையபட்டியில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்காக அவரது ரசிகர்கள் பேனர் ஒன்று வைத்திருந்தனர். அதில் ஜூலை 23இல் பிறந்தநாள் காணும் "பெண்களின் கனவு கணவனே" என்ற சர்ச்சைக்குரிய வாசகம் இடம்பெற்றிருந்தது.
![சர்ச்சைக்குரிய பேனர் சமூக வலைதளங்களில் வைரல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tri-01-womens-dream-husband-suriya-controversial-banner-goes-viralon-socialmedia-image-script-tn10020_09082022182007_0908f_1660049407_124.jpg)
மேலும், மணப்பாறையிலிருந்து மதுரை செல்லும் பிரதான சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த பிளெக்ஸ் பேனர் இன்று(ஆக.09) வரை அகற்றப்படாமல் இருப்பதால், அவ்வழியே செல்லும் திருமணமான வாகன ஓட்டிகள் கடும் எரிச்சலுக்கு ஆளாவதாகத்தெரிகிறது. இதை சிலர் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: குற்றாலம் சாரல் திருவிழா: கரகத்தை தலையில் வைத்த கலெக்டர்; 'ஆ..'வென்று பார்த்த நடிகை ஆண்ட்ரியா