திருச்சி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் திருச்சிக்கு நேற்று (ஜூன் 11) வருகை தந்தார். இதைத்தொடர்ந்து பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு இன்று (ஜூன் 12) காலை வருகை தந்து, தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து, இந்தக் கோயிலில் உள்ள கோ-சாலைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கோ-சாலையில் அமைச்சர்: அப்போது மாடுகள் பராமரிப்பு, நோய் தடுப்பு குறித்து பணியாளரிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து, தாயார் சன்னிதியை தரிசனம் செய்த எல்.முருகன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதைத்தொடர்ந்து, சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார். அதன் பின்னர், மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி, அடுத்து கோட்டபாளையம் பகுதியிலுள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் சாலை வழியாக பெரம்பலூருக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
இதையும் பிடிங்க: அக்டோபர் மாதம் ஆந்திராவில் இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு!