ETV Bharat / city

'வேல்யாத்திரை முடியும் போது திமுகவுக்கு எதிரான சூரசம்ஹாரம் தொடங்கும்'- பொன். ராதாகிருஷ்ணன் - பாஜக

டிசம்பர் 5ஆம் தேதி திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவடையும்போது ஊழல் திமுகவிற்கு எதிரான சூரசம்ஹாரம் தொடங்கும் என திருப்பூரில் வேல் யாத்திரை பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Bjp vel yathra
'வேல்யாத்திரை முடியும் போது திமுகவுக்கு எதிரான சூரசம்ஹாரம் தொடங்கும்'- பொன். ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Nov 22, 2020, 11:02 PM IST

திருப்பூர்: தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் வேல் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள வித்யாலயா பகுதியில் பாஜக சார்பில் இன்று (நவம்பர் 22) பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக வேல்யாத்திரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், குஷ்பு ஆகியோர் மேடையில் ஏறாமல் மேடைக்கு முன்புறமாக இருந்த ஆட்டோவில் ஏறி தொண்டர்களிடையே பேசினார்கள்.

அப்போது பேசிய முன்னாள் மத்திய இணையமைச்சர், "வேல் யாத்திரை என்பது பாஜகவின் அரசியல் போராட்டம் இல்லை. இது தமிழர்களின் தன்மானத்தை காக்கும் போராட்டம். வேல்யாத்திரைக்கு எதிராக பெரியார் கைத்தடி யாத்திரை நடத்தியவர்கள் மீது காவல்துறை வன்முறையை தூண்டுவதாக கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யவேண்டும். வேல்யாத்திரை டிசம்பர் 5ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும்போது ஊழல் திமுகவிற்கு எதிரான சூரசம்ஹாரம் தொடங்கும்" என்றார்.

'வேல்யாத்திரை முடியும் போது திமுகவுக்கு எதிரான சூரசம்ஹாரம் தொடங்கும்'- பொன். ராதாகிருஷ்ணன்

பொதுக்கூட்டத்தில் பேசிய குஷ்பு, "தமிழ்நாட்டிற்கு இதுவரை பாஜக 67ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான திட்டத்தை கொடுத்துள்ளது. மக்களைச் சந்திக்காமல் வெளிநாட்டுக்குப் போய் ஓய்வு எடுக்கும் தலைவர் மோடி அல்லை. வேல்யாத்திரையில் திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட கலந்துகொண்டு வருகின்றனர்.

பாஜகவின் வேல்யாத்திரை, பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், குஷ்பு உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அப்போது, காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: திருமாவை அடித்து விரட்டும்வரை வேல் யாத்திரை தொடரும் - ஹெச். ராஜா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.