ETV Bharat / city

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார்? அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி - அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார்? அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்தார்.

Who is the AIADMK Chief Ministerial candidate  Kadampur Raju Interview  அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார்? அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி  அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

author img

By

Published : Oct 6, 2020, 4:07 AM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவிற்கு உள்பட்ட கல்லூரணி, கோவில்பட்டி தாலுகாவிற்கு உள்பட்ட லாயல்மில் காலனி கொடுக்காம்பாறை ஆகியவற்றில் அம்மா நடமாடும் நியாயவிலைக்கடை மற்றும் லிங்கம்பட்டியில் பள்ளி கட்டட திறப்பு நிகழ்ச்சி ஆகியவற்றில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தொடங்கிவைத்தார்.

இதில் மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி, கூட்டுறவு இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், நகர செயளாலர் விஜயபாண்டியன், கயத்தாறு நகர செயளாலர் வினோபாஜீ, ஒன்றிய செயளாலர் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ் செண்பகராஜ், ஒன்றிய துணைப்பெருந்தலைவர் பழனிச்சாமி மற்றும் அரசு அலுவலர்கள் அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிமுகவில் பிரச்சினையே இல்லை. துணை முதல்வராக இருந்து ஓ.பி.எஸ். அரசு சிறப்போடு செயல்பட துணையாக இருக்கிறார். செயற்குழுவில் பல்வேறு விவாதங்கள் நடந்தன. தேர்தல் வரும் நேரத்தில், என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம். யாருடன் கூட்டணி வைக்கலாம் என்றெல்லாம் விவாதங்கள் நடைபெறும்.

யார் முதலமைச்சர் என்று கேள்வி அங்கு எழவில்லை. வெளியிலே பேசப்பட்டு தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு உள்ளது. அங்கே எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை தனது ட்விட்டர் பதிவில் துணை முதல்வர் ஓபிஎஸ் சூசகமாக தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் மட்டுமல்ல அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமாக உள்ளார்.

அவரை கட்சி நிர்வாகிகள் சென்று சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். அவர் பெரியகுளம் வந்திருக்கும் நேரத்தில் எளிதாக சென்று பார்க்கலாம் என கட்சி நிர்வாகிகள் சந்திப்பது வழக்கமான நடைமுறைதான். இதை அரசியலாக்கி பார்ப்பவர்களுக்கு அரசியலாக தெரியும்.
ஓ.டி.டி. என்பது மாநில அரசு மட்டுமல்ல மத்திய அரசுக்கு கூட கட்டுப்பட்டது அல்ல. இது உலகளாவிய பிரச்சினை. கரோனா ஊரடங்கு தளர்வு அளிக்கப்படாத நிலையில் திரையரங்குகள் திறக்கப்படாததால், திரைப்படத் தயாரிப்பாளர்கள் அவர்களது பொருளாதாரத்தை அடிப்படையில் ஓ.டி.டி‌.யில் திரைப்படங்களை வெளியிட்டனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக ஏற்பாடாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். இது தற்காலிகமாக இருந்தால் மகிழ்ச்சி. நிரந்தரமாக இருந்தால் திரையரங்குகள் பாதிக்கப்படும். திரைப்படங்கள் மக்களை சென்றடைய திரையரங்குகள் தான் சரியான சாதனம்.

திரைப்படத்துறையினர் கலந்துபேசி கொண்டுள்ளனர். விரைவில் நல்ல முடிவு வரும்” என்றார்.

இதையும் படிங்க: துறை ரீதியான 'கண்டன' நடவடிக்கை விருப்ப ஓய்வை பாதிக்காது - நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.