ETV Bharat / city

பொதுமக்களுடன் இணக்கமான உறவு ஏற்படுத்தப்படும் - தூத்துக்குடி கண்காணிப்பாளர் ஜெயக்குமார் - tuticorin new sp jeyakumar

தூத்துக்குடி: காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி கண்காணிப்பாளர் ஜெயக்குமார்
தூத்துக்குடி கண்காணிப்பாளர் ஜெயக்குமார்
author img

By

Published : Jul 1, 2020, 3:45 PM IST

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணை கைதியாக கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் அடுத்தடுத்து சந்தேகமான முறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி உயர் காவல் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அருண் பாலகோபாலன் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், சாத்தான்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் உள்ளிட்டோரும் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஶ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், காலியாக இருந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் பூங்கொத்து கொடுத்து வரவேற்று பொறுப்புகளை ஒப்படைத்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணி பாதுகாக்கவும், சாலை விபத்துக்களை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலை சீர் செய்யவும், குற்றங்களை தடுக்கவும், நடந்த குற்றத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்துவதற்கும், நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.