ETV Bharat / city

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் புதிய சாதனை - tuticorin voc harbor

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 81.50 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத காற்றாலை இறகுகளை கையாண்டு புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

tuticorin voc harbor
ராட்சத காற்றாலை இறகு
author img

By

Published : Jan 22, 2022, 8:23 AM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், காற்றாலை இறகு மற்றும் உதிரி பாகங்கள் கையாளுவதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் 2 ஆயிரத்து 898 காற்றாலை இறகுகளும், 1,248 காற்றாலை கோபுரங்களும் கையாளப்பட்டு உள்ளன.

உலகத்தரம் வாய்ந்த காற்றாலை இறகுகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் உள்ள இட வசதிகள், எட்டு வழி துறைமுக இணைப்பு சாலை, சீரான தேசிய நெடுஞ்சாலை இணைப்பு போன்ற அம்சங்களை கருத்திற்கொண்டு, வ.உ.சி. துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்கின்றன.

அதன்படி, வ.உ.சி. துறைமுகத்தில் 81.50 மீட்டர் நீளமும், 25 டன் எடையும் கொண்ட ராட்சத காற்றாலை இறகுகளை கையாண்டு புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

இந்தக் காற்றாலை இறகுகள் ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஜனவரி 20ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. துறைமுகத்தில் உள்ள அதிநவீன பளுதூக்கிகள் மூலம் இந்தக் காற்றாலை இறகுகள் கப்பலில் ஏற்றப்பட்டன.

142.8 மீட்டர் நீளம் கொண்ட எம்.ஒய்.எஸ்.டெஸ்நேவா என்ற கப்பலில் 81.50 மீட்டர் நீளம் கொண்ட ஆறு காற்றாலை இறகுகளும், 77.10 மீட்டர் நீளம் கொண்ட 12 இறகுகளும் ஏற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து கப்பல் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றது.

இதையும் படிங்க: வரலாற்றின் ஒழுங்கின்மையை சரிசெய்யும் நேதாஜி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.