ETV Bharat / city

கிடப்பில் மத்திய அரசின் ரூ 5990 கோடி நிதி..விவசாயிகளுக்கு பயனளிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை தேவை - மழையில் நனைந்து வீணான நெல் மூடைகள்

தமிழகத்தில் விவசாய திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஒதுக்கிய சுமார் ரூ 5,990 கோடி கிடப்பில் உள்ளதாக பாஜக விவசாய அணி தமிழக தலைவர் ஜி.கே. நாகராஜ் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 6, 2022, 9:08 AM IST

தூத்துக்குடி: தமிழகத்தில் கிடப்பிலுள்ள மத்திய அரசின் ரூ.5,990 கோடியை விவசாய திட்டங்களுக்காக பயன்படுத்த வேண்டுமென தமிழ்நாடு பாஜக விவசாய அணித் தலைவர் ஜி.கே. நாகராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.

தூத்துக்குடியில் நேற்று (செப்.5) பாஜக விவசாய அணி சார்பில் நடந்த கன்னியாகுமரி கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் விவசாய அணி தமிழக தலைவர் ஜி.கே.நாகராஜ், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் உறுப்பினர்களுக்கு இயற்கை விவசாய உரங்கள் மற்றும் இடுபொருட்களை வழங்கினார்.

பாஜக விவசாய அணி தமிழக தலைவர் ஜி.கே. நாகராஜ் பேட்டி

நெல் கொள்முதலில் ஊழல்: பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழகத்தில் திமுக அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது. நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு மூடை ஒன்றுக்கு ரூ.2,100 வழங்குகின்ற நிலையிலும், தமிழக அரசு நெல் கொள்முதலில் ஊழல் செய்கிறது. கடந்த ஆண்டு 9 லட்சம் டன் நெல் மழையில் நனைந்து வீணாகியது. அவிநாசி அத்திக்கடவு திட்டம் உள்ளிட்ட கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல விவசாய திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தாமல் உள்ளது.

கரும்புக்கு விவசாயிகளுக்கு ரூ.4000 எங்கே? பாஜக விவசாய அணியின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை களையவும், விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தப்படுகிறது. திமுக அரசு கடந்த தேர்தலின்போது, கரும்புக்கு குறைந்தபட்ச விலை ரூ.4,000 வழங்குவோம் என்று கூறியது. ஆனால், இதுவரை அதனை நிறைவேற்றவில்லை. இதன் காரணமாக 25,000 ஏக்கர் பரப்பளவு கரும்புகள் வெட்டப்படாமல் அப்படியே கிடக்கிறது.

ஒரே உரம் - பாரத் உரம்: மத்திய அரசு விவசாயிகளுக்காக வழங்கி வரும் திட்டங்களில் தமிழக அரசு பாரத பிரதமரின் படத்தை தவிர்த்து வருகிறது. அனைத்து நிறுவனங்களும் ஒரே பெயரில் பாரத் உரம் என்ற ஒரே பெயரில் உரத்தை விநியோகம் செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது விரைவில் நடைமுறைக்கு வரும் போது உரம் தொடர்பான பிரச்னைகள் களையப்படும். மேலும், இயற்கை உரங்கள் தயாரிக்க மத்திய அரசு உடனடி அனுமதி வழங்கி வருகிறது.

கிடப்பில் ரூ 5,990 கோடி: வெளிமாநில நெல்லை கொள்முதல் செய்வதை தவிர்ப்பதற்காக சன்ன ரக நெல் உற்பத்தியை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும்; மத்திய அரசு தமிழகத்தின் விவசாய திட்டங்களுக்காக வழங்கிய தொகையில் ரூ.5,990 கோடி பயன்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளது' என்றும் அவர் குற்றம் சாட்டினார். அப்போது உடன் விவசாய அணி மாநிலதுனைதலைவர் ஜெயக்குமார், மாநில திட்ட பொறுப்பாளர் ஸ்ரீராம் உட்பட பாஜகவினர் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ’ராகுல் காந்தியின் நடைபயணத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை..!’ - சீமான்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.