ETV Bharat / city

நர்ஸுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் மீது வழக்குப் பதிவு - மருத்துவர்

தூத்துக்குடியில் செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான டாக்டரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் மீது வழக்கு பதிவு

author img

By

Published : Jun 1, 2022, 10:35 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி சாலை புதூரைச் சேர்ந்த செவிலியர் பட்டயப் படிப்பை முடித்த இளம்பெண் ஒருவர் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள முரளி மருத்துவமனையில் செவிலியராக கடந்த 20 ஆம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், மருத்துவர் முரளி, செவிலியர் பெண்ணுக்கு கடந்த ஒரு வாரமாக தினமும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் செவிலியர் மருத்துவரின் மனைவியும், பெண் மருத்துவரான விமலா தேவியிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் உரிய விசாரணை நடத்தாமல் ஒருதலைபட்சமாகச் செவிலியர் பெண்ணை இழிவுபடுத்தி வெளியேற்றியுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த பாதிக்கப்பட்ட செவிலியர் தனது வீட்டில் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட செவிலியர் அளித்தப்புகாரின்பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மகேஸ்வரி விசாரணை நடத்தி மருத்துவர் முரளி மீது பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தலைமறைவான மருத்துவரைத் தேடி வருகிறார்.

இதையும் படிங்க: கரூரில் 4 வயது சிறுமி வன்புணர்வு; 47 வயது முதியவருக்கு 30 ஆண்டு சிறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.