ETV Bharat / city

மாலத்தீவு கடலில் கடல் சீற்றம்... தமிழ்நாடு மாலுமி உயிரிழப்பு

மாலத்தீவு கடலில் ஏற்பட்ட திடீர் கடல் சீற்றத்தால் தமிழ்நாடு மாலுமி ஒருவர் கடலில் முழ்கி உயிரிழந்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 2, 2022, 7:37 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்குகளை ஏற்றிச்சென்ற தோனி, கடலில் ஏற்பட்ட சீற்றத்தின் காரணமாக நடுக்கடலில் மூழ்கியது. தோனியில் சென்ற மாலுமிகளில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். ஆறு பேர் வேறு கப்பல் மூலம் மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து தோனி உரிமையாளர் சங்கத்தினர் கூறுகையில், 'தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு காய்கறி, கட்டுமானப்பொருட்கள் மற்றும் இதரப்பொருட்கள் தோனி எனக்கூடிய சிறிய வகை கப்பல்களில் இலங்கை, மாலத்தீவிற்கு கொண்டு செல்லப்படும். பின் அங்கிருந்து பல நாடுகளுக்கு வேறு கப்பல்கள் மூலம் சென்றடையும்.

அதன்படி, தூத்துக்குடியைச்சேர்ந்த ரைமண்ட் என்பவருக்குச் சொந்தமான எஸ்தர் ராஜாத்தி என்ற தோனியானது, 250 டன் கூடிய இரும்பு பொருட்கள், காய்கறிகள் மற்றும் கட்டுமானப்பொருட்கள் ஏற்றிக்கொண்டு கடந்த செப்.28ஆம் தேதி மாலை 3 மணிக்கு தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவு புறப்பட்டுச்சென்றது.

இத்தோனியில் கேப்டன் கில்பெர்ட் தலைமையில், சஹாரா, கில்பர்ட், ஸ்டான்லி சாக்ரியாஸ், அண்டன் ராஜேந்திரன், மில்டன், அந்தோணி வஸ்டின், லிங்கராஜ் ஆகிய ஏழு பேர் மாலுமிகளாக தோனியில் சென்றுள்ளனர்.

அப்போது பயண கணக்கின்படி தோனியானது நேற்று அக்.1 ஆம் தேதி மாலத்தீவு சென்றடைய வேண்டும். இந்நிலையில், நேற்று(அக்.01) அதிகாலை மாலத்தீவிலிருந்து சுமார் 50 கடல் மைல் தொலைவில் தோனி சென்று கொண்டிருந்தபோது அதிவேக காற்று வீசியதன் காரணமாக கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், தோனி கடலில் மூழ்கியது. அப்போது தோனியில் சென்ற மாலுமிகள் அனைவரும் ஆழ்கடலில் தத்தளித்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற ஒரு கப்பலில் இருந்த மாலுமிகள் தோனி மூழ்குவதையும், அதில் உள்ள பொருட்கள் கடலில் தத்தளிப்பதினைக் கண்டதும் அவர்களை கயிறு மற்றும் ஏணி மூலமாக மீட்டுள்ளனர்.

தோனி உரிமையாளர் சங்கத்தினர் அளித்த பேட்டி

ஆறு மாலுமிகள் மீட்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி லயன்ஸ் டவுனை சேர்ந்த ஸ்டான்லி சாக்ரியாஸ் (59), என்ற மாலுமி கடலில் மூழ்கி உயிரிழந்தார். பின்னர், அவர் உடலை கடலோர காவல் படையினர் கைப்பற்றி மாலத்தீவு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

இந்த துயர சம்பவத்தினால் பொருட்கள் உட்பட 7 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டதாக தோனி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அம்பேத்கரும், அப்துல் கலாமும் எந்த வர்ணம்? - சின்மயா மிஷன் தயாரித்துள்ள பாடப்புத்தகத்தில் சர்ச்சை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.