தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி செவன்த் டே பள்ளி அருகில் தனிப்படை காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மதுரையிலிருந்து வந்த சரக்கு வேனை காவல் துறையினர் சோதனையிட்டபோது, வேனில் இருந்த சாக்குப் பையில் 25 கிலோ கஞ்சா கடத்திவரப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சரக்கு வேனுடன் கஞ்சாவைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், வேனை ஓட்டிவந்த அலெக்ஸ்பாண்டி (21) என்பவரைக் கைதுசெய்து வடபாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: யூ-ட்யூபர் நாகை மீனவன் படகில் 280 கிலோ கஞ்சா பறிமுதல்