ETV Bharat / city

தூத்துக்குடியில் 2 பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு - கல்குவாரியில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கல்குவாரியில் குளிக்கச் சென்ற இரண்டு பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பள்ளி மாணவிகள்
பள்ளி மாணவிகள்
author img

By

Published : Jun 25, 2022, 8:32 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார் மகள் வைஷ்ணவி (16). இவர் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். வக்கீல் தெருவைச் சேர்ந்தவர் ஷேக் முகமது மெகர் ரோஜா மகள் ஜன்னத் அர்சியா (13). இவர் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இருவரும் அருகே உள்ள கல்குவாரியில் குளிக்க சென்றனர்.

அப்போது இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால்நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் கோவில்பட்டி தீயணைப்பு அலுவலர்களுடன் சம்பவயிடத்திற்கு விரைந்து, பல மணி நேரமாக தேடி இருவரது உடல்களையும் மீட்டனர். இதையடுத்து உடல்கள் உடற்கூராய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வீடியோ: ”மாணவர்களே மாநிலத்தின் அறிவு சொத்து” - முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.