ETV Bharat / city

குடியிருப்புப் பகுதியில் அலைபேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு! - மேலே ஏறி இளைஞர் போராட்டம் - protest against cell phone tower in Sankarankovil

திருநெல்வேலி: சங்கரன்கோவிலில் குடியிருப்புப் பகுதியில் அலைபேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் அதன் மீது ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு
author img

By

Published : Nov 2, 2019, 10:34 AM IST

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன் நகர்ப்பகுதியில் அலைபேசி கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். ஏற்கனவே தனியார் அலைபேசி கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் மாதம் அப்பகுதி மக்கள் சங்கரன்கோவில் கழுகுமலை செல்லும் சாலையை மறித்து போராட்டம் நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், இங்குக் கோபுரம் அமைக்கும் பணி கிடப்பில் இருந்ததுள்ளது. ஆனால், நேற்று முன்தினம் இரவோடு இரவாகக் அலைபேசி கோபுரம் உயரமாகக் கட்டப்பட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகாமையில் இந்த கைப்பேசி கோபுரம் அமையக் கூடாது என்று கூறி சீனிவாசன் எதிரே உள்ள கோபுரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவலறிந்த வந்த சங்கரன்கோவில் நகரக் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறையினர் சீனிவாசனிடம் ஒலிபெருக்கி மூலம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் அவரது பெற்றோரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு! மேலே ஏறி இளைஞர் போராட்டம்

அதற்குச் சீனிவாசன், கைப்பேசி கோபுரத்தின் மேலே இருந்துகொண்டு, அந்த செல்போன் டவரை அகற்றினால்தான் நான் கீழே இறங்குவேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து எதிரே புதிதாக அமைய உள்ள கைப்பேசி கோபுரத்தை அகற்றும் பணியில், அலுவலர்கள் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர் கீழே இறங்கிவந்தார். இதனால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

Intro:சங்கரன்கோவிலில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம்.Body:சங்கரன்கோவிலில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம்.

சங்கரன்கோவிலில் செல்போன் டவர் மீது ஏறி இளைஞர் ஒருவர் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டார்....

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன் நகர் பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்த சண்முகராஜ் என்பவரது மகன் சீனிவாசன் என்பவர் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். ஏற்கனவே தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் பகுதி மக்கள் சங்கரன்கோவில் கழுகுமலை செல்லும் சாலையில் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில் இந்த டவர் அமைக்கும் பணி கிடப்பில் இருந்தது மேலும் நேற்று இரவோடு இரவாக செல்போன் டவர் உயரமாக கட்டப்பட்டதால் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் இந்த செல்போன் டவர் அமையக்கூடாது சீனிவாசன் எதிரே உள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார் தகவலறிந்த சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் வருவாய்த்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்த சீனிவாசனிடம் ஒலிபெருக்கி மூலம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் மேலும் அவனது பெற்றோரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அதற்கு சீனிவாசன் டவர் மேலே இருந்து அந்த செல்போன் டவரை அகற்றினால் தான் நான் கீழே இறங்குவேன் என்று கூறியதால் எதிரே புதிதாக அமைய உள்ள செல்போன் கோபுரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டதை தொடர்ந்து அவர் கீழே இறங்கி வந்தார் இதனால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.