தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் பிப்.28ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
அதனடிப்படையில் தேர்தல் ஆட்சியர்கள், பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுவினர், காவல்துறையினர் முதல்கட்ட தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், காவல்துறையினருடன் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இன்று (மார்ச்.5) ஆலோசனை நடத்தினார்.
அதில் அவர், "மாவட்டத்தின் ஐந்து தொகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களில் முடிக்கப்பட வேண்டிய பணிகள் அனைத்தும் விரைவாக நடக்கவேண்டும் என உத்தரவிட்டார். அதையடுத்து இதுவரை என்னென்ன பணிகள் முடிக்கப்படுள்ளன. மீதமுள்ள பணிகள் என்னென்ன என்பது குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: தேர்தல் பணியை தொய்வின்றி செய்ய வேண்டும் - மாநகராட்சி ஆணையர்