ETV Bharat / city

சரியான பாதை இல்லாததால் இறந்தவரின் உடலை வாய்க்காலில் நீந்தியபடி இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் அவலம்! - நாங்குநேரி செய்திகள்

திருக்குறுங்குடி அருகே இடுக்காட்டுக்குச் செல்ல சரியான பாதை இல்லாததால், இறந்தவர்களின் உடலை வாய்க்காலில் கழுத்தளவு தண்ணீரில் நீந்தியபடி எடுத்துச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

சரியான பாதை இல்லை
சரியான பாதை இல்லை
author img

By

Published : Nov 21, 2020, 7:09 AM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்டது புதுத்தெரு, இறடிகால் பகுதிகள். இங்கே சுமார் 250க்கும் அதிமான குடும்பங்கள் வசித்துவருகின்றன.

இந்தப் பகுதியிலுள்ளவர்கள் இறந்தால் அவர்களை அடக்கம செய்ய அருகிலுள்ள இடுகாட்டிற்கு, புலியூர்நத்தம் வாய்க்காலைத் தாண்டிதான் எடுத்துச் செல்ல வேண்டும். மழைக் காலங்களிலும், வாய்க்காலில் தண்ணீர் வரும் நேரங்களிலும் இறந்தவர்களின் உடல்களைக் கழுத்தளவு தண்ணீரில் நீந்திய படிதான் எடுத்துச் செல்லும் அவலத்திற்கு இப்பகுதி மக்கள் ஆளாக நேரிடும்.

தங்களின் இடுகாட்டிற்கு வாய்க்காலைக் கடந்து செல்ல மேல் நிலைப் பாலம் அமைத்து தராத அரசு நிர்வாகத்தை கண்டித்து, கடந்த நான்குநேரி சட்டப்பேரவை இடைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாத இப்பகுதி மக்கள் அறிவித்தனர். தகவல் அறிந்து வந்த அலுவலர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியாளித்ததைத் தொடர்ந்து, மக்கள் தங்களின் தேர்தல் புறக்கணிப்பு முடிவைக் கைவிட்டனர். மக்களின் இடுகாடு பிரச்னை இன்னும் தீரவில்லை.

இறந்தவரின் உடலை வாய்க்காலில் நீந்தியபடி இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் அவலம்

இந்தநிலையில், இந்தப் பகுதியைச் சேர்ந்த நல்லமுத்து என்பவர் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கிற்காக, புலியூர்நத்தம் வாய்க்காலைக் கடந்து எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. சில நாள்களாக நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் வாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் சென்றது, இதனால் இறந்தவரின் உடலை கழுத்தளவு தண்ணீரில் நீந்தியபடி எடுத்துச்செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், தங்களின் பகுதி வாய்க்காலில் உயர்மட்ட பாலம் அமைத்து தரவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.