ETV Bharat / city

வாழ்வூதியம் 10 ஆயிரம் ரூபாய் கொடுங்க...! ஆசிரியர்கள் பட்டினிப் போராட்டம்!

திருநெல்வேலியில் வாழ்வூதியம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கக் கோரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் பட்டினிப்போராட்டம் நடத்தினர். 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கவும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

tirunelveli teachers protest
tirunelveli teachers protest
author img

By

Published : Jul 10, 2020, 1:25 PM IST

திருநெல்வேலி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் பள்ளி ஆசிரியர்கள் பட்டினி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் கரோனா தாக்கமும், அதன்மூலம் அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு காரணமாக லட்சக்கணக்கானோர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். குறிப்பாக தனியார் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் இன்று பட்டினிப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கையில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள், கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு அரசு 10,000 ரூபாய் வாழ்வூதியம் வழங்க வேண்டும் என்றும், 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

வீடு தரைமட்டமானது... பெண் மரணம்! வீடு கட்டிக் கொடுத்ததாக பணத்தை உண்டு ஏப்பம் விட்ட அரசு அலுவலர்கள்!

அதுமட்டுமில்லாமல், பள்ளி வாகனங்களுக்கு எந்த நிபந்தனையும் இன்றி வரி விலக்கு அளிக்க வேண்டும், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி இந்த பட்டினிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் நர்சரி, பிரைமரி பள்ளிகள் அதிகளவில் இருப்பதாகவும், இங்கு வேலை பார்க்கும் எங்களை போன்ற ஆசிரியர்களை குறித்து யாரும் கவலப்படுவதில்லை என்றும் கூறியுள்ள போராட்டக் குழுவினர், அரசு இதர்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.