திருநெல்வேலி: முதலமைச்சர் தேர்தல் பரப்புரை செய்யவுள்ள இடங்களின் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சருமான ஆர்பி. உதயகுமார் அதிமுக அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
அக்கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயகுமார், “தேர்தல் நெருங்கும் நேரத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதை விடுத்து தமிழக அரசு முழு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய தயாராகி வருகிறது இது தவறானது மரபு மீறிய செயல் என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளது குறித்துக் கேட்டதற்கு அவர் காலாவதியான அரசியல்வாதி அவர் கருத்துக்கெல்லாம் நான் பதில் அளிக்க விரும்பவில்லை.
பொதுமக்களை ஏமாற்றும் வகையில் பொய் வாக்குறுதிகளை அளித்து நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. சாமானிய மக்களை ஏமாற்றும் செயலில் தற்போதும் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். எனினும் இம்முறை மக்கள் ஏமாற மாட்டார்கள். குறைகளைக் கேட்கிறேன் என்ற பெயரில் போலி ரசீது வழங்கி வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.