ETV Bharat / city

ஸ்மார்ட் சிட்டி பணிகள் 2023ல் நிறைவு பெறும் - அமைச்சர் கே.என். நேரு - smart city scheme in Tirunelveli

திருநெல்வேலி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முழுவதும் வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கேஎன் நேரு
அமைச்சர் கேஎன் நேரு
author img

By

Published : Jul 24, 2021, 9:14 PM IST

Updated : Jul 25, 2021, 6:57 PM IST

திருநெல்வேலி: தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு, திருநெல்வேலி மாநகர பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை ஆய்வு செய்தார். மாநகரப் பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள 10 பேருந்து நிறுத்தங்களைத் திறந்து வைத்தார்.

பாளையங்கோட்டை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டார். திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையைத் திறந்து வைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு?

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,"நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் நடைபெறவுள்ள தேர்தல்களில் போட்டியிடும் பதவிக்கு, இன சுழற்சி முறையில் மாற்றம் கொண்டு வரப்படும்.

வார்டு வரையறை முடிக்கப்பட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அனைத்தும் தயார் நிலையில் உள்ளது என 2018ஆம் ஆண்டு முந்தைய ஆட்சியாளர்கள் தெரிவித்த நிலையில் அதன் மீது பல்வேறு புகார் வந்துள்ளது.

அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து புகார்களும் சரிசெய்யப்பட்ட பின்னர் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும். திருநெல்வேலி மாநகராட்சியில் 895.52 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகிறது.

பணிகள் குறித்த விவரம்

ரூ.161 கோடி மதிப்பிலான பணிகள் நிறைவு பெற்றுள்ளது, ரூ.698.10 கோடி மதிப்பிலான பணிகள் நடக்கின்றன. ரூ.296.11 மதிப்பிலான பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. தற்போது வரை 60 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளன.

திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்கும் மூன்றாவது கட்ட பணிகள் செய்யும் ஒப்பந்ததாரர் குறிப்பிட்ட நேரத்தில் பணியை முடிக்காவிட்டால் ஒப்பந்ததாரரை மாற்றுவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

எம்ஜிஆர் பெயரில் திட்டங்கள்

ரூ.230 கோடி திட்ட மதிப்பில் நடந்து வரும் மாநகராட்சியின் குடிநீர் திட்டப்பணிகள் 91% முடிவடைந்துள்ளது. செப்டம்பர் மாத இறுதியில் பணிகள் அனைத்தும் முடிவுபெற்று மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முழுவதும் வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும். கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் அனைத்தும் எம்ஜிஆர் பெயரிலேயே தொடங்கப்பட்டுள்ளது.

ஓராண்டுக்குள் குடிநீர் இணைப்பு

ஜல் ஜீவன் திட்டம் அனைத்தும் கிராமப்புறத்தை நோக்கியே உள்ளது. நகர்ப்புறங்களில் ஜல் ஜீவன் திட்டம் இப்போதுதான் அறிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாநகராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்துக்கான வரையறை வகுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டால் நகர் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு ஓர் ஆண்டுக்குள் வழங்கப்படும்.

சட்டப்பேரவையில் அறிவிப்பு

தமிழ்நாடு அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாநகராட்சியில் துணை நகரங்கள் அமைக்கும் திட்டம் குறித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார்.

அதனை தொடர்ந்து அந்த திட்டங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறும். புதிய மாநகராட்சி, நகராட்சி குறித்த அறிவிப்புகள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெளியாகும்.மேலும், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தொடங்கி, இந்தாண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 2ஆம் தேதி சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படம் திறப்பு!

Last Updated : Jul 25, 2021, 6:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.