ETV Bharat / city

புறம்போக்கு நிலங்களில் தேவாலயங்கள் கட்ட அனுமதி கோர வேண்டாம் - பீட்டர் அல்போன்ஸ் எச்சரிக்கை! - சபாநாயகர் அப்பாவு

"அரசு புறம்போக்கு இடத்தில் தேவாலயங்களை கட்டி விட்டு அனுமதி கேட்டால் எப்படி கொடுக்க முடியும்?, இறந்த பிறகும் அடக்கம் செய்ய பாகுபாடு பார்ப்பதா?" என திருநெல்வேலியில் நடைபெற்ற சிறுபான்மையினர் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் அதன் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

minority commission, tamil nadu speaker, appavu, Peter Alphonse, tirunelveli news, திருநெல்வேலி செய்திகள், நெல்லை செய்திகள், பீட்டர் அல்போன்ஸ், சபாநாயகர் அப்பாவு, சிறுபான்மையினர் ஆணையம்
பீட்டர் அல்போன்ஸ்
author img

By

Published : Nov 10, 2021, 6:29 PM IST

திருநெல்வேலி: தமிழ்நாடு அரசு சார்பில் சிறுபான்மையின மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், "கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் செயல்படாமல் இருந்த சிறுபான்மை நல ஆணையத்தை தூசிதட்டி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கர்நாடக மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட கிறிஸ்தவர்கள் தங்கள் ஆராதனை வழிபாடு நடத்த முடியாத சூழல் உள்ளது.

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு

ஆனால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சிறுபான்மையின மக்கள் மிக பாதுகாக்க மிக கண்ணியத்தோடு வாழ கூடிய நிலை உள்ளது. ஜனநாயகத்தில் சிறுபான்மை என்பது ஒரு ஊனம். ஒன்றிய அரசு சிறுபான்மை மக்களுக்கு வழங்கும் உதவித்தொகை குஜராத், உத்திரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களிலையே நின்று விடுகிறது," என்று கூறினார்.

குறிப்பாக புதிதாக கட்டப்படும் தேவாலயங்களுக்கு அனுமதி கிடைப்பதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து பேசும்போது, பலர் அரசு புறம்போக்கு இடத்தில் தேவாலயங்களை கட்டிவிட்டு அனுமதி கேட்பதாகவும், அது போன்ற இடங்களுக்கு யார் நினைத்தாலும் அனுமதி கொடுக்க முடியாது என்றும் பீட்டர் அல்போன்ஸ் வெளிப்படையாக தெரிவித்தார். தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற சிறுபான்மையினர் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்னர், சுமார் 18 லட்சம் மதிப்பில் பல்வேறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.

அதனையடுத்து ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முல்லை பெரியாறு அணையில் குறிப்பிட்ட அளவு நீரை பெருக்கவில்லை என்று பெரிய போராட்டம் நடத்துகிறார். அவருக்கு என் பாராட்டுக்கள்.

இதேபோல் தயவுசெய்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமரே அடிக்கல் நாட்டிய பிறகும் கட்டப்படாமல் இருக்கிறது. அதற்காகவும் அவர் ஒரு ஆர்ப்பாட்டத்தை சென்னையில் நடத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் தூர் வாருகிறோம் என்ற பெயரில் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர்.

சமத்துவ கல்லறைத் தோட்டம்

பல இடங்களில் கல்லறைகளில், மத வேறுபாடுகள் இருப்பதால், சில பேரை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கின்றனர். எனவே, சாதி மத வேறுபாடின்றி சமத்துவ கல்லறைகளை உருவாக்கித் தர முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகள் மட்டும் நீர் நிலைகளை சரி செய்ய ரூ.3000 கோடி செலவு செய்துள்ளனர். ஆனால் தற்போது விரைவாக மீட்புப் பணிகள் நடைபெறுகிறது என்றால் கடந்த ஐந்து மாதத்தில் திமுக அரசு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தான் தேர்தலுக்கு முந்தைய இரண்டு ஆண்டுகள் ஒதுக்கப்பட்ட 3000 கோடி ரூபாய் சென்னையில் எங்கு செலவழிக்கப்பட்டது.

பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் வழக்கு சென்று கொண்டிருப்பதால், ஆணையம் விசாரணையை தொடரவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஆணையம் செயல்படாத்தால், சிறுபான்மையினருக்கு எதிரான நடைபெற்ற குற்றங்கள் குறித்த தரவுகளை எதுவும் இல்லை.

பொதுவாக எந்த மதங்களிலும் புறம்போக்கு இடங்களில் தேவாலயங்களையும், வழிபாட்டுக் கூடங்களையும் அமைக்காதீர்கள். புறம்போக்கு இடத்தில் கட்டி விட்டு அனுமதி கேட்கும்போது, அரசால் அனுமதி கொடுக்க முடியாது. பட்டா இடங்களில் வழிபாட்டுத்தலங்கள் கட்டுவதாக இருந்தால், அதற்கான அனுமதியை மாவட்ட ஆட்சியர்கள் விரைந்து அளிக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சித்துவுக்கு கிடைத்த வெற்றி: பஞ்சாப் தலைமை வழக்கறிஞரின் ராஜினாமா ஏற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.