ETV Bharat / city

ரயில் பெட்டிகளை கரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றும் பணிகள் தீவிரம் - கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே துறை சார்பில் ரயில் பெட்டிகளை கரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நெல்லை: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே துறை சார்பில் ரயில் பெட்டிகளை கரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரயில் பெட்டிகளை கரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

author img

By

Published : Apr 9, 2020, 9:20 AM IST

இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாளும் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அரசு மருத்துவமனைகளில் உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள். அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாது மற்ற அரசு சார்ந்த கட்டடங்களையும் கரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையிலுள்ள சிறப்பு கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலர் தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் வந்து பரிசோதனை செய்து செல்கின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி வெளி நோயாளிகள் பிரிவை கரோனா வார்டாக மாற்றும் முயற்சியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ரயில்வே துறை சார்பில் நெல்லை ரயில் நிலையத்திலுள்ள ரயில் பெட்டிகளை கரோனா வார்டுகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையில் முதற்கட்டமாக ஒரு ரயில்பெட்டியில் 9 படுக்கைகள் என்ற அடிப்படையில் 18 பெட்டிகள் மாற்றப்பட்டு வருகிறது. ஒரு ரயில்பெட்டி, நோயாளிகள் பிரிவு, மருத்துவர்கள் பிரிவு, கழிப்பறை என மூன்று பிரிவுகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

ரயில் பெட்டிகளை கரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

நோயாளிகள் பிரிவில் மத்தியில் இருக்கும் படுக்கை அகற்றப்பட்டு, மேல் படுக்கைக்கு செல்லும் படிகளும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பிரிவில் மருத்துவ உபகரணங்கள் வைப்பதற்கான இருப்புகள், மருத்துவ கழிவுகளை போடுவதற்கான குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. நோயாளிகள் பிரிவையும் மருத்துவர்கள் பிரிவையும் பிரிக்கும் வகையில் பிளாஸ்டிக் திரைகள் கொண்டு மூடப்பட்டுள்ளன.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.