ETV Bharat / city

எந்த நேரத்திலும் பேருந்துகள் இயக்க தயார் - மண்டல போக்குவரத்து அலுவலர் தகவல்

திருநெல்வேலி: தினமும் பேருந்துகளை பராமரித்து வருவதாகவும், அரசு உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் பேருந்துகள் இயக்க தயாராக இருப்பதாகவும் நெல்லை மண்டல போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி: தினமும் பேருந்துகளை பராமரித்து வருகிறோம் அரசு உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் பேருந்துகள் இயக்க தயாராக உள்ளோம் நெல்லை மண்டல போக்குவரத்து அதிகாரி தகவல்.
வ்திருநெல்வேலி: தினமும் பேருந்துகளை பராமரித்து வருகிறோம் அரசு உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் பேருந்துகள் இயக்க தயாராக உள்ளோம் நெல்லை மண்டல போக்குவரத்து அதிகாரி தகவல்.
author img

By

Published : May 15, 2020, 10:45 AM IST

நாடு முழுதும் கரோனா ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மே 4ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் சில அத்தியாவசிய சரக்கு போக்குவரத்து மட்டும் தற்போது தொடங்கியுள்ளது. இருப்பினும் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து தொடங்கவில்லை. பேருந்துகள் இயங்காததால் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள், முதியவர்கள், இருசக்கர வாகனங்கள் இல்லாத ஏழை குடும்பத்தினர், அவசர உதவிக்காக பல இடங்களுக்கு சென்று வர முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே அரசு பேருந்துகள் எப்போது இயங்கும் என்ற எதிர்பார்ப்பில் கிராமத்து பொதுமக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், திருநெல்வேலி மண்டலத்தில் பணிமனைகளில் தினமும் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அரசு உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் பேருந்துகளை இயக்க தயாராக உள்ளதாகவும் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருநெல்வேலி மண்டல போக்குவரத்து கழக மேலாளரிடம் கேட்டபோது, "நெல்லை மண்டலத்தில் உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளை தினமும் முறையாக பராமரித்து வருகிறோம். பேருந்துகள் நீண்ட நாட்கள் இயங்காமல் இருந்தால் பழுதாகி விடும் என்பதால் தினமும் காலை மாலை இருவேளையும் பணிமனைகளுக்குள் பேருந்துகளை இயக்கி வருகிறோம். அரசு தரப்பில் தயாராக இருக்கும்படி தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வந்து கொண்டிருக்கிறது. எனவே அரசு உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் பேருந்துகளை இயக்க தயாராக உள்ளோம்.

முதல்கட்டமாக எத்தனை பேருந்துகள் இயக்க வேண்டும் என்பது குறித்து இன்னும் எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. அதேபோல் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரு பேருந்தில் அதிகபட்சம் 22 பேர் மட்டுமே பயணிக்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அதாவது மூன்று இருக்கைகள் கொண்ட ஒரு வரிசையில் ஒரு பயணி மட்டும் அமரவேண்டும்.

அதேபோல் ஒரு இருக்கை கொண்ட வரிசையில் வழக்கம்போல் ஒரு பயணி மட்டும் அமரவேண்டும் பொதுவாக ஒரு பேருந்தில் இரண்டு வரிசைகளுக்கும் 10 இருக்கைகள் போடப்பட்டிருக்கும். அந்தவகையில் 20 பயணிகள் மற்றும் பின்புறம் கடைசி இருக்கையில் இரண்டு பயணிகள் என மொத்தம் 22 பயணிகள் பயணிக்கலாம் என்று குறிப்பிட்டார். இதற்கிடையில், முதல்கட்டமாக கரோனா பாதிப்பில்லாத பகுதிகளில் அரசு 50 சதவீத பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாகவும் அலுவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:

தடையை மீறி இயக்கப்பட்ட 3 கர்நாடக பேருந்துகள் சிறைப்பிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.