சேலத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் மார்கழி மாதத்தை முன்னிட்டு ஸ்ரீனிவாச திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பெங்களூரு ஸ்ரீவாரி ட்ரஸ்ட் குழுவினர் நடத்திய இந்நிகழ்ச்சியில் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தை சேலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தத்ரூபமான முறையில் அமைத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீனிவாச பெருமாள், லட்சுமி சிலைகளுக்கு அபிஷேகம், ஊஞ்சல் உற்சவம், முகூர்த்த கால் நடுதல், ஓம குணடம் வளர்ப்பு, நடனம், திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பாடல்கள் பாடி பெருமாளை வழிபட்டனர்.
இதையும் படிங்க: அதிரடியாக இறங்கி போக்குவரத்தை சீர் செய்த இளைஞர்கள்!