ETV Bharat / city

பிறந்த தினமா? பெயர் வைத்த தினமா? - சீமான் கேள்வி

author img

By

Published : Nov 1, 2021, 8:35 PM IST

குழந்தை பிறந்த நாளை கொண்டாடுவீர்களா, இல்லை அக்குழந்தைக்கு பெயர் வைத்த நாளை கொண்டாடுவீர்களா என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

naam tamilar party, seeman slams tn govt, tamil nadu day, நாம் தமிழர் கட்சி, தமிழ்நாடு தினம், தமிழ்நாடு அரசு, வரலாற்றைத் திரிக்கும் திராவிட இயக்கங்கள்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

சேலம்: நாம் தமிழர் கட்சி சார்பாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 'தமிழ்நாடு தினம்' வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "தமிழர்கள் நாங்கள், தமிழ்நாடு நாளாக தொடர்ச்சியாக நவம்பர் 1 ஆம் தேதியைக் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு சேலத்தில் கொண்டாடுகிறோம்.

நவம்பர் 1, 1967இல் தமிழ்நாடு தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு என்று பெயர் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ஜூலை 18ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவித்தது, அவசியமற்ற குழப்பம்.

குழந்தை பிறந்த நாளை கொண்டாடுவீர்களா, இல்லை அக்குழந்தைக்கு பெயர் வைத்த நாளை கொண்டாடுவீர்களா என அரசுக்கு கேள்வியை முன்வைக்கிறேன். தமிழ்நாடு அரசின் முடிவு என்பது, குழந்தைக்கு பெயர் வைத்த நாளை பிறந்த நாளாக கொண்டாடுவது போல் உள்ளது.

குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. வரலாற்றை திரிக்கும் முயற்சியில் திராவிட கட்சிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

முந்தைய அதிமுக அரசு, வன்னியர்களுக்கு வழங்கிய 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், தற்போது கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்த பிறகு இட ஒதுக்கீடு ரத்து என நீதிமன்றம் கூறியுள்ளது பெரிய ஏமாற்றம். தேர்தலுக்காக அதிமுக அரசு சட்ட வல்லுனர்களை ஆலோசிக்காமல் அறிவித்ததே இந்த ஒதுக்கீடு.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

தமிழ்நாட்டில் சரியாக மொழி வாரியாக கணக்கெடுக்க வேண்டும். சாதி வாரியாக எண்ணிக்கைக்கேற்ப இட ஒதுக்கீட்டை சரியாக பிரித்து தர வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: 'பெற்றதும், இழந்ததும்' - தமிழ்நாடு 63

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.