சேலம்: மேச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் மூன்று ரோடு பகுதியிலிருந்து மினிடோர் ஆட்டோ மூலம், ஐந்துரோடு பகுதிக்கு அதிவேகமாகச் சென்றுள்ளார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த மினிடோர் ஆட்டோ, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த விஜயகுமார், சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த ஸ்ரீதர் ஆகியோர் மீது மோதியது.
இதில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய மினிடோர் ஆட்டோ சாலையின் ஓரமாகக் கவிழ்ந்தது. இதை நேரில் பார்த்த பொதுமக்கள், சம்பவம் குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்த இருவரையும் காவல் துறையினர் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மதுபோதையில் இருந்த ஓட்டுநர் ராஜேந்திரனைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை - தமிழ்நாடு அரசு ஆணை