சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள சுகவனேஸ்வரர் கோயிலில் சுமார் 87 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதில், கோயில் கோபுரங்களில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு வண்ணம் தீட்டுதல், மூலவர் சன்னதி விமானம், மேல் தளம் உள்ளிட்டவைகளில் மராமத்துப் பணிகள் செய்தல் மற்றும் கோயில் குளத்தை தூர் வருதல் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அதேபோல குமரகிரி பாலதண்டாயுதபாணி கோயில் கட்டட பணி ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோட்டை பெருமாள் கோயிலில் சுற்றுப் பிரகாரம் தரைத்தளம் அமைக்கும் பணி ரூ.50 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது.
கோட்டை மாரியம்மன் கோயில் திருக்கோவிலும் கருவறை மற்றும் சுற்றுப்புற மண்டபம் கட்டும் பணிகள், ரூ.93 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தையும் இன்று நேரில் பார்வையிட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அறநிலையத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது சேலம் தெற்கு சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ சக்திவேல், சேலம் மேற்கு சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ வெங்கடாசலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும் - ஸ்டாலினுக்கு விஜயபாஸ்கர் எச்சரிக்கை