மக்களவைத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 884 வாக்குப்பதிவு இயந்திரங்கள், நான்காயிரத்து 751 விவிபேட் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. இதில் 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 81 கட்டுப்பாட்டுக் கருவிகள், 236 விவிபேட் இயந்திரங்கள் பழுது அடைந்தன.
இந்தக் கருவிகள் அனைத்தும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இருப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக, இயந்திரங்களைப் பயன்படுத்தும் வகையில் பழுது நீக்கும் பணிக்காகப் பெங்களூருவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.
இதனையொட்டி அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த இருப்பு அறை திறக்கப்பட்டு, பழுதடைந்த 397 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ராமன் பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பிவைத்தார்.