நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தை விற்பனை சம்பவம் தொடர்பாகச் செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 12 பேர் காவல்துறையினரால் கைது செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடியினர் விசாரித்து வரும் நிலையில், குற்றவாளிகள் அனைவரும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தனர். இதனடிப்படையில் செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், லீலா, ஓட்டுநர் முருகேசன் ஆகிய நான்கு பேருக்கு மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் நிபந்தனை அடிப்படையில், முதல்நாளான இன்று ஜாமீன் கிடைத்த லீலாவும், முருகேசனும் சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகிக் கையெழுத்திட்டனர். இதற்காக சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்த லீலாவை தனியார் செய்தி நிறுவன ஒளிப்பதிவாளர் ஒருவர் படமெடுத்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்து லீலா அவர் கையிலிருந்த படக்கருவியைதட்டிவிட முயன்றுள்ளார். மேலும் ஒளிப்பதிவாளரை தன் கைப்பேசியில் படம் பிடித்தோடு, மிரட்டல் விடுத்தார்.