மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 75 வயதான மூதாட்டி ஆதரவற்றவர் என்பதால் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். வழக்கமாக அவர் யாசகம் பெரும் இடத்திலுள்ள கடையின் முன் இரவு நேரம் உறங்குவார்.
அதேபோல் நேற்றிரவு (நவ.22) கடையின் முன்பு மூதாட்டி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு போதையில் வந்த இளைஞர், மூதாட்டியை தூக்கிச்சென்று பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார். ஆனால், மூதாட்டி திடீரென விழித்துக் கொண்டார்.
இதனால், மூதாட்டியை கொலை செய்துவிட்டு, அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார். இதனை கண்காணிப்புக் கேமராவில் கண்காணித்து வந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இளைஞர் கைது
பின்னர், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அந்த மூதாட்டியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். பின்னர், அவரை கைது செய்தனர்.
அவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும், அண்மையில் அவர் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: Sexual Harassment Case: தலைமறைவான தாளாளர் கோர்ட்டில் சரண்