ETV Bharat / city

தேஜஸ் சிறப்பு ரயில்! - முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்! - பொங்கல் பண்டிகை முன்பதிவு

மதுரை: ஜனவரி 17 ஆம் தேதிக்கான மதுரை-சென்னை தேஜஸ் சிறப்பு ரயில் முன்பதிவு, தொடங்கிய இரண்டு மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

train
train
author img

By

Published : Jan 8, 2021, 1:16 PM IST

Updated : Jan 8, 2021, 2:19 PM IST

சென்னை-மதுரை-சென்னை தேஜஸ் சிறப்பு ரயில், பயணிகள் வரத்து குறைவு காரணமாக ரத்து செய்யப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன் தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மத்திய ரயில்வே அமைச்சருக்கு தேஜஸ் ரயில் ரத்து முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் நேற்று தேஜஸ் ரயில் கைவிடப்படும் என்ற முடிவை வாபஸ் பெறுவதாக தென்னக ரயில்வே அறிவித்தது. இதையடுத்து தேஜஸ் சிறப்பு ரயிலுக்கான பொங்கல் திருநாள் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. ஆனால், ஜனவரி 17ஆம் தேதி மதுரையிலிருந்து சென்னை செல்லும் தேஜஸ் ரயில் முன்பதிவு தொடங்கிய இரண்டு மணி நேரத்திலேயே டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத் தீர்ந்தன.

மதுரையிலிருந்து சென்னை எழும்பூர் வரை தேஜஸ் சிறப்பு ரயிலில் பயணிக்க, குளிரூட்டப்பட்ட பெட்டியில் ரூ.920ம், திருச்சி - சென்னைக்கு ரூ.710ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: அசால்ட்டாக செயினை பறிக்கும் அடையாளம் தெரியாத நபர்கள்: சிசிடிவி வெளியீடு!

Last Updated : Jan 8, 2021, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.