இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வெற்றி காண்கிற வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன் களம் காண்கிறார். தேனி நாடாளுமன்ற தொகுதியில் ரவீந்திரநாத் குமார் களம் காண்கிறார். விருதுநகர் தொகுதியில் எங்கள் கூட்டணி கட்சி தேமுதிக வேட்பாளர் போட்டியிடுகிறார். அவர்களின் வெற்றிக்காக பாடுபடுவோம்
நாளை உசிலம்பட்டியிருந்து நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறும். அதன்பிறகு வாக்காளர்கள் சந்திப்பு நடைபெறும். மதுரை, தேனி, விருதுநகர் தொகுதிகளில் வெற்றி பெற பாடுபடுவோம். வெற்றிக் கனியை அம்மா கோயிலில் சமர்பிப்போம். உட்கட்சி பூசல் ஏதுமில்லை. தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகவே புறநகர் பிரிக்கப்பட்டது” என்றார்.