பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மிக கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்தமுறை கரோனா காரணமாக போட்டிகள் கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட இருக்கிறது. அதன்படி, அவனியாபுரத்தில் ஜனவரி 14 ஆம் தேதியான தைப்பொங்கல் அன்றும், அடுத்த நாளான மாட்டுப் பொங்கலன்று பாலமேட்டிலும், காணும் பொங்கலன்று அலங்காநல்லூரிலும், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
ஜனவரி 16 ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
இந்நிலையில், வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் நாளன்று அவனியாபுரத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியைக் காண காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் ராகுலின் மதுரை வருகையை மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரியும் உறுதிபடுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 10, 12ஆம் வகுப்புகள் ஜன. 19 திறப்பு!