பாஜக மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானி மதுரை வந்திருந்த போது, அவர் காரில் செல்லும் வழித்தடத்தில் பைப் வெடிகுண்டு இருந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, 'போலீஸ் பக்ருதீன்' என்பவரைக் கைது செய்தனர். அவர் விசாரணை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த 'போலீஸ் பக்ருதீனின்' பாட்டி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஒரு வாரம் பரோல் வழங்க வேண்டி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் ஒரு நாள் பரோல் வழங்கி உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்தியச் சிறைக்கு கொண்டு வரப்பட்ட 'போலீஸ் பக்ருதீன்', இன்று அவருடைய வீடு அமைந்திருக்கக் கூடிய முனிச்சாலை பகுதியில் அவரை அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர், அந்தப் பகுதியில் வீட்டைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:
கேங்மேன் பணிக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாந்தால் அரசு பொறுப்பேற்காது - அமைச்சர் தங்கமணி