ETV Bharat / city

‘2024ஆம் ஆண்டிற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வலியுறுத்துவோம்’ - சு. வெங்கடேசன் எம்பி - நாடாளுமன்ற எம்பி சு. வெங்கடேசன்

2024ஆம் ஆண்டிற்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த வேண்டி தொடர்ந்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளனர்.

சு. வெங்கடேசன் எம்பி
சு. வெங்கடேசன் எம்பி
author img

By

Published : Aug 22, 2021, 6:40 AM IST

மதுரை: மக்கள் பிரதிநிதிகள் அனுப்பும் கடிதங்களுக்கு ஆங்கிலத்தில் பதில் அளிக்க வேண்டும் என்ற தீர்ப்பு வந்துள்ள நிலையில், அந்த வழக்கில் திறம்பட வாதாடிய வழக்கறிஞர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டும் நிகழ்வு மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்; வழக்கறிஞர்கள் கண்ணன், புகழேந்தி மற்றும் குழுவினருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்தி திணிப்பு நடவடிக்கை

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த சு. வெங்கடேசன், “ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கை அதிகமாகி கொண்டிருக்கிறது. அரசின் 80 விழுக்காடு திட்டங்களுக்கு இந்தியிலேயே பெயர் சூட்டப்படுகிறது. இந்தியாவின் மொழி சமத்துவத்திற்கு இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்திய ஆட்சி மொழி சட்டத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையை எதிர்த்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வந்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை

இந்தி பேசாத மாநில மக்களின் மொழி உரிமையை காக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த வழக்கை வெற்றிகரமாக நடத்தி முடித்த வழக்கறிஞர் கண்ணன், புகழேந்தி அவர்களது குழுவினருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

சமீபத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. அதில், மதுரை எய்ம்ஸ் 2024ஆம் ஆண்டிற்குள் நடத்தி கொடுப்பதற்கான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஜப்பான் நிறுவனம் கடன் கொடுப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவிட்டன.

செய்தியாளர்களைச் சந்தித்த சு. வெங்கடேசன்

கால தாமதம் ஆவதை தவிர்க்க தென் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராடி கொண்டிருக்கிறோம். விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்து சேர்ப்போம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: எய்ம்ஸ் மருத்துவமனை மீம்ஸ் - கண்டெண்ட் கொடுத்த லாரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.