ETV Bharat / city

சர்ச்சை பேச்சு! - வருத்தம் தெரிவித்த அமைச்சர்! - வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை: குறிப்பிட்ட சமுதாயம் குறித்து இழிவாக பேசியதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு வருத்தம் தெரிவித்துள்ளார்.

sellur raju
sellur raju
author img

By

Published : Dec 19, 2020, 9:44 AM IST

மதுரை மாவட்டம் பரவையில் நடைபெற்ற அம்மா மினி கிளினிக் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, குறிப்பிட்ட சமுதாயம் குறித்து இழிவாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, ” ஜாதி, மதம் பார்த்து பழகும் பழக்கம் எனக்கில்லை. தேர்தல் நேரத்தில் தேவையின்றி அதற்கு சாயம் பூச வேண்டாம். மிக எதார்த்தமாகத்தான் அந்த பழமொழியை நான் குறிப்பிட்டேன்.

மேலும், அக்குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவரைத்தான் கடந்த முறை மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்க உழைத்தவன் நான். அதேபோன்று அச்சமுதாயம் சார்ந்த இளைஞர்கள் பலர் என்னுடன் உள்ளனர். இவ்விவகாரத்தில் திட்டமிட்டே என் மீது பழி சுமத்த தேவையின்றி பரப்புரை செய்யப்படுகிறது.

சர்ச்சை பேச்சு! - வருத்தம் தெரிவித்த அமைச்சர்!

அக்குறிப்பிட்ட பேச்சில் வாய் தவறி சொல்ல வந்ததை உடனடியாக திருத்திக் கொண்டு விட்டேன். ஆகையால் அச்சமுதாயம் சார்ந்த மக்கள் நான் அவ்வாறு பேசியதாக நினைத்தால் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் “ என்றார்.

இதையும் படிங்க: 'மக்கள் அனைவரையும் முதலமைச்சர்களாக பார்க்கிறேன்' - முதலமைச்சர் பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.