ETV Bharat / city

Kavalkinaru Check post Issue: தனி நபர் வீட்டின் முன்பாக சோதனைச்சாவடி: ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு - காவல் கிணறு

மதுரை: தனிநபரின் வீட்டுக்கு முன்பாக உள்ள காவல் துறையினர் சோதனைச் சாவடியை (Kavalkinaru Check post Issue) அகற்றக் கோரிய வழக்கு குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
author img

By

Published : Nov 15, 2021, 5:24 PM IST

நெல்லை, ராதாபுரத்தைச் சேர்ந்த மைக்கேல் மகேந்திரன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "காவல்கிணறு (Kavalkinaru Check post Issue) விலக்குப் பகுதியில், கன்னியாகுமரி செல்லும் நெடுஞ்சாலையில் காவல் துறையினரின் சோதனைச் சாவடி, எங்கள் வீட்டுக் கட்டடத்தை ஒட்டி உள்ளது. தற்போது காவல் துறையினர் சோதனைச்சாவடியை விரிவாக்கம் செய்து கட்டடமாகக் கட்ட முயற்சி செய்து வருகின்றனர்.

அவ்வாறு அமைக்கப்பட்டால், எங்களது வீடு, கடைக்கு வாகனங்கள் வந்து செல்ல இயலாத நிலை உருவாகும். இதே நெடுஞ்சாலையில் யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை கோரி அலுவலர்களிடம் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

ஆகவே நெல்லை மாவட்டம், காவல்கிணறு விலக்குப் பகுதியில், தனி நபரின் வீட்டிற்கு முன்பாக காவல் துறையினர் சோதனைச்சாவடி கட்டடம் கட்டுவதற்கு தடை விதித்தும், சோதனைச் சாவடியை அகற்றவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "அந்தப் பகுதியில் வேறு இடங்கள் இருக்கும்போது தனி நபருக்கு இடையூறு செய்யும் வகையில் ஏன் சோதனைச்சாவடி கட்டடம் அமைக்கப்படுகிறது?” எனக் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, வழக்கு குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: நாட்டின் முதல் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் ரயில் நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.