மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரில் தியாகிகளுக்கு நினைவு மண்டபம் கட்ட கோரி பேரையூரைச் சேர்ந்த செல்வ பிரீத்தா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "குற்றப் பழங்குடி சட்டத்திற்கு எதிராக 1970ஆம் ஆண்டில் பெருங்காமநல்லூரில் போர் நடைபெற்றது. அந்தப்போரில் 16 பேர் வீரமரணம் அடைந்தனர். போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு ரத்தம் சிந்திய இடத்திலேயே மணிமண்டபம் கட்டித் தரக்கோரி பலமுறை மனு அளித்த நிலையில்,
- 2019 மார்ச் 8ஆம் தேதி மணிமண்டபம் கட்டித் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
அதன்படி,
- 2020 செப்டம்பர் 19ஆம் தேதி பெருங்காமநல்லூரில் தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டுவது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் பெருங்காமநல்லூரில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடமானது மயானம் ஆகும்.
இந்த மயானத்தை பெருங்காமநல்லூர் பகுதி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே, பெருங்காமநல்லூரில் தியாகிகளுக்கு நினைவு மண்டபம் கட்ட இடம் தேர்வுசெய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்துசெய்து உரிய இடத்தை தேர்வுசெய்து அரசாணை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், எஸ். ஆனந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, "மனுதாரர் கோரும் நிவாரணம் தொடர்பாக நீதிமன்றம் தடை உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. இது தொடர்பாக அலுவலர்களுக்கு மனு அனுப்பி மனுதாரர் நிவாரணம் தேடிக்கொள்ளலாம்" எனக்கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: 'பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு: 3ஆவது முறையாக ஸ்டாலின் அரசு உத்தரவு!'