மதுரை: ஆண்டாள்புரம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற சுங்கத்துறை அலுவலர்கள் வெங்கட் சுப்பிரமணியன். இவரது ஒரே மகன் கிருஷ்ணமூர்த்தி (33) எம்இ பட்டதாரியான இவருக்கு உரிய வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இதனால், கடந்த சில நாள்களாகவே சற்று மன உளைச்சலில் இருந்த அவர் மனநலம் பாதிக்கப்பட்டது போல் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன் கிருஷ்ணமூர்த்தி, தான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மனைவி குடும்பத்தார் தொல்லை - திமுக பிரமுகர் தற்கொலை