ETV Bharat / city

அனைவருக்கும் கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும்... உயர் நீதிமன்ற மதுரக்கிளை... - தமிழ்நாடு அரசு

உசிலம்பட்டி பகுதியில் உள்ள மூக்கையா தேவர் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கு குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கல்வி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்

author img

By

Published : Sep 9, 2022, 12:25 PM IST

தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜெயபால் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் சீர் மரபினர் சமூகத்தை சேர்ந்தவன். உசிலம்பட்டி பகுதியில் அமைந்துள்ள மூக்கையா தேவர் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக கல்லூரி முதல்வர் மற்றும் கள்ளர் கல்விக் கழக செயலாளர் வசூலித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட கல்லூரி இணை இயக்குநர் விசாரணை மேற்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக ரூ. 12 லட்சத்து 83 ஆயிரம் கட்டணம் வசூலித்ததாக அறிக்கை அளித்துல்ளார். அதுதொடர்பான நடவடிக்கைகள் நிலுவையில் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் 22-23 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு கல்லூரி முதல்வர் முதலில் விண்ணப்பம் செய்யும்படியும், பிறகு கட்டணம் செலுத்திக் கொள்ளலாம் என்பது போல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதை எதிர்த்து கல்லூரி வளாகத்திற்குள் டிஎன்டி அமைப்பினர் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்படப்பளவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை எனவே தமிழ்நாடு அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை பெற்று மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்ய நாராயண பிரசாத் அடங்கிய அமர்வு, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மாணவரின் எந்தவிதமான பின்புலத்தையும் பார்க்காமல் மாணவரின் மதிப்பெண்களை மட்டுமே பார்த்து அவரின் முழு கல்விச்சலவையும் அரசாங்கமே வழங்குகிறது. கல்வி என்பது மாணவர்களுக்கு கட்டாயம் இலவசமாக வழங்கப்பட வேண்டும். சமூகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் பேருந்து நிலையத்தில் நிற்கும் சூழ்நிலையும் கல்வி நிலையம் வைத்து நடத்தும் முதலாளிகள் பிஎம்டபிள்யூ காரிலும் பயணிப்பதுமே தற்போதைய சூழலாக உள்ளது. கல்லூரிகளில் மாணவர்களின் கல்வி கட்டணங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து தமிழ்நாடு உயர் கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ஒருவர் செயல்திறன் மிக்கவராக திகழ புத்தகங்களை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.