ETV Bharat / city

மதுரை மல்லிகை கிலோ ரூ.1,200: முகூர்த்த நாள் என்பதால் விலை அதிகரிப்பு - Madurai Malligai

முகூர்த்த நாள் என்பதால் மதுரையில் மல்லிகையின் விலை கிலோ ரூ.1200 ஆக விலை உயர்ந்துள்ளது.

மதுரை மல்லிகை
மதுரை மல்லிகை
author img

By

Published : Jun 9, 2022, 2:20 PM IST

மதுரை மாட்டுத்தாவணி அருகே ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு மதுரை மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

குறிப்பாக, மதுரையின் தனிச்சிறப்பு வாய்ந்த 'மதுரை மல்லிகை' நாளொன்றுக்கு சராசரியாக 50-டன்னுக்கும் மேலாக விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், மதுரை மல்லிகை வெளிமாநிலங்களுக்கு மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக, மதுரை மல்லிகை விலை ரூ.600 என்ற அளவில் இருந்து வந்தது. இதனிடையே நாளை முகூர்த்த நாள் என்பதால், இன்று (ஜூன்9) கிலோ ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், பிற பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது. சம்பங்கி ரூ.180, பட்டன் ரோஸ் ரூ.150க்கும் செண்டுமல்லி ரூ.70க்கும் பிச்சி ரூ.500க்கும் முல்லை ரூ.500க்கும் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மதுரை ஒருங்கிணைந்த மலர் சந்தை

இதுகுறித்து மதுரை மாட்டுத்தாவணி சில்லறை பூ விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், கடந்த சில நாட்களாக கணிசமாக இருந்த பூக்களின் விலை; தற்போது முகூர்த்த நாள் என்பதால் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த சில நாட்களுக்கும் இதே விலை நீடிக்கும் என எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களுக்கு இணையவசதி: பாரத்நெட் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.